சென்னையில் சட்டக்கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்ய கோரிய வழக்‍கு : நிலத்தை கண்டறிந்து தெரிவிக்‍க அரசுக்‍கு ஜூன் 24 வரை அவகாசம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் சட்டக்கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்வது தொடர்பாக வருவாய் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கிவந்த டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி 2 ஆக பிரிக்கப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் கிராமத்திலும், காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் கிராமத்திலும் செயல்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையில் சட்டக்கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்வது பற்றி வருவாய் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Night
Day