எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் சர்.பிட்டி தியாகராயர் அரங்கம், செனாய் நகர் அம்மா அரங்கம் ஆகியவற்றை தனியாருக்கு வழங்கும் மாநகராட்சியின் முடிவால், குறைந்த செலவில் பொது விழாக்களை நடத்தி வந்த எளிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எளிய மக்கள் பொது நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியதன் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
நீதிக்கட்சியின் தலைவராக இருந்த சர். பிட்டி தியாகராயர் நினைவாக, கடந்த 1925ம் ஆண்டு சென்னை நகரில் புதிதாக உருவாக்கப்பட்ட நகருக்கு தியாகராய நகர் என பெயர் சூட்டப்பட்டது. இங்கு பிட்டி தியாகராயர் அரங்கம் எனும் பெயரில் தி.நகரில் அரசு விழாக்கள் நடத்தப்படும் அரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த அரங்கில் குறைந்த செலவில் எளிய மக்கள் பல்வேறு பொது விழாக்களை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில்தான் தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கம், செனாய் நகர் அம்மா அரங்கம் ஆகியவை தனியாருக்கு வழங்கும் மாநகராட்சியின் முடிவு எளிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் சைதாப்பேட்டை, வியாசர்பாடி, திரு விக நகர் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல்தரை கால்பந்து விளையாட்டுத் திடல்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை, பல்வேறு அரசியில் கட்சிகளின் எதிர்ப்பால் மாநகராட்சி திரும்பப் பெற்றது.
கால்பந்து திடல்கள் மட்டும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவது தவிர்க்கப்பட்டால் மட்டும் போதாது, தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கம், செனாய் நகர் அம்மா அரங்கம் ஆகியவற்றை தனியாருக்கு வழங்கும் மாநகராட்சியின் முடிவை திரும்ப பெற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் குரல் கொடுத்துள்ளனர்.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் தியாகராயர் அரங்கத்தை 24 மணி நேரம் பயன்படுத்துவதற்கான வாடகை தற்போதுள்ள 20 ஆயிரத்து 650 ரூபாயிலிருந்து 59 ஆயிரமாக உயர்த்தப்படும். அம்மா அரங்கத்தின் வாடகை 3 லட்சத்து 40 ஆயிரத்திலிருந்து 5 லட்சத்து 40 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எளிய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் அரங்குகளின் வாடகை மும்மடங்கு அளவுக்கு உயர்த்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தியாகராயர் அரங்கில் சில ஆயிரம் ரூபாய் செலவில் 3 மணி நேரத்திற்கான நூல் வெளியீடு உள்ளிட்ட இலக்கிய நிகழ்ச்சிகளை பழைய வாடகையில் எளிய மனிதர்களால் நடத்தி விட முடியும். அனால் உயர்த்தப்பட்ட 59 ஆயிரம் ரூபாய் புதிய வாடகை கட்டணத்தை செலுத்தி தான் நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என்றால் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். எனவே, எளிய மக்கள் பொது நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியதன் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கம், செனாய் நகர் அம்மா அரங்கம் ஆகியவற்றை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கால்பந்து திடல்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவது தவிர்க்கப்பட்டது போல், தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கம், செனாய் நகர் அம்மா அரங்கம் ஆகியவற்றை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது....