எழுத்தின் அளவு: அ+ அ- அ
கரூரில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரும், அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக சங்கர் ஆனந்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதேபோல், ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி என்பவர் வீட்டிலும், கோதை நகர் பகுதியில் உள்ள சக்தி மெஸ் கார்த்தி என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மூன்று இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் கேரளாவை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதேபோல் சென்னையிலும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.