சென்னையில் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 960 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்கப்படுவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 960 ரூபாய் 54 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 825 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 95 ரூபாய்க்கும், கிலோவுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் உயர்ந்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day