சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.58,960-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 58 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அந்தவகையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 58 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை எவ்வித மாற்றம் இன்றி 106 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day