சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்தது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 440 ரூபாய்க்கும், கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 380 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி 2 ரூபாய் 50 காசுகள் குறைந்து, கிராமுக்கு 89 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் குறைந்து 89 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Night
Day