சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.440 உயர்ந்தது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ஒரே நாளில் 440 ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று ஆபரண தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்த நிலையில், இன்று 440 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 640 ரூபாய்க்கும், கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 705 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல், வெள்ளி கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து 95 ரூபாய் 60 காசுகளுக்கும், கிலோவுக்கு 600 ரூபாய் அதிகரித்து 95 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Night
Day