சென்னையில் தங்கம் சவரன் ரூ.55,000-ஐ நெருங்கியது - வரலாறு காணாத உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தங்கம் விலையில் தினசரி மாற்றம் ஏற்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 520 ரூபாய் குறைந்த நிலையில், இன்று 640 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 870 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 99 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து 99 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day