சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புறநகர் ரயில்களும் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக கடற்கரையிலிருந்து அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புறநகர் ரயில்களும் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் வசதிக்காக சென்னை பூங்காவில் இருந்து தாம்பரத்துக்கு காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை இரு மார்க்கத்திலும் 20 முதல் 30 நிமிடங்கள் இடைவெளியில் ஒரு சில ரயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ரயில் சேவை நிறுத்தம் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day