சென்னையில் போதைப்பொருள் சப்ளை - ஆந்திராவைச் சேர்ந்த நபர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு போதை பொருள் சப்ளை செய்த ஆந்திராவைச் சேர்ந்த முதாசீர் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர். வடமாநில கும்பலிடமிருந்து இருந்து போதை பொருளை வாங்கி சென்னையில் பார்ட்டிகள் நடக்கும் பண்ணை வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை குறிவைத்து முதாசீரின் கூட்டாளிகள் விற்பனை செய்து வந்துள்ளனர். ஏற்கனவே இவரது கூட்டாளிகள் மகேஸ், பரூக், மிதுன், காதர் மொய்தீன், தீபன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த முதாசீரை வடக்கு கடற்கரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். முதாசீர் மீது சென்னை நகரில் ப​ல்வேறு காவல்நிலையங்களில் போதைப்பொருள் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

varient
Night
Day