சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ராயபுரம் - கடற்கரை ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.


சென்னை ஆவடியில் இருந்து கடற்கரைக்குச் சென்ற மின்சார ரயில் ராயபுரம் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரயிலை சீரமைத்தனர். அதன்பின், ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதன் காரணமாக ஆவடி -சென்னை கடற்கரை ரயில் வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

varient
Night
Day