சென்னையில் மேலும் 22 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் கூடுதலாக 22 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆனையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராதாகிருஷ்ணன் பெரம்பூரில் ஜெயா பிளஸ் தொலைக்காட்சி பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது, சென்னையை பொறுத்தவரை தேர்தல் முன்னேறுபாடுகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சென்னையில் ஏற்கெனவே 611 வாக்குச்சாவடிகள் பதற்றாமனவை என கண்டறியப்பட்ட நிலையில், கூடுதலாக 22 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

varient
Night
Day