சென்னையில் யாத்திரை நடத்துவது ஏன் - உயர்நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பரங்குன்றம் மலை பிரச்னைக்காக சென்னையில் யாத்திரை நடத்துவது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி, சென்னை ஏகாம்பரேஷ்வரர் கோவிலில் இருந்து கந்தக்கோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது யாத்திரைக்கு மனுதாரர் கேட்கும் வழித்தடம் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், திருப்பரங்குன்றம் மலையை காரணமாக்கி, தேவையற்ற கலவரங்களை உருவாக்கி மக்களின் ஒற்றுமை குலைந்து விடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. எனவே யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் தேவையற்ற விரும்பதகாத பிரச்னைகளை உருவாக்கும் என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், யாத்திரைக்கு வேறு இடத்தை தேர்வு செய்து தெரிவிக்குமாறு கூறி மனு மீதான உத்தரவை நாளை மறுதினத்துக்கு ஒத்திவைத்தனர்.

Night
Day