சென்னையில் 24 மணி நேரமும் மது விற்பனை - பொதுமக்கள் அதிர்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கே.கேநகர் உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் மதுபான விற்பனை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மாக் செயல்பட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் அதனை மீறி 24 மணி நேரமும் டாஸ்மாக் பார்களில் மது விற்பனை நடைபெறுகிறது. கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் செயல்படும் மதுக்கடையில் விடிய. விடிய மது விற்பனை நடப்பதால் அந்த பகுதியில் பெண்கள் குழந்தைகள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மதுபாட்டிலை வாங்கி செல்லும் மது பிரியர்கள் குடித்து விட்டு அங்கேயே ரகளையில் ஈடுபடுவதாக மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். அனைத்து ரக மதுபானங்களும் 24 மணி நேரமும் கிடைப்பதால் இளைஞர் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகம் நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டும் இன்றி பவர் ஹவுஸ் சென்னை மாநகராட்சி மருத்துவமனை எதிரே உள்ள டாஸ்மாக் கடை 24 மணி நேரமும்  செயல்படுவதாக குற்றம் சாட்டும் அப்பகுதி மக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர். 

Night
Day