சென்னையில் 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையின் 4 இடங்களில் உள்ள பைனான்சியர், நகை கடை அதிபர், தொழிலதிபர்கள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடபழனி அடகு கடை மற்றும் பைனாஸ் தொழில் நடத்தி வரும் வீரேந்திர மால் ஜெயின் என்பவரது வீடு மற்றும் கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோன்று அசோக்நகரில் வசிக்கும் ரியல்எஸ்டேட் தொழிலதிபர் ஐயப்பனுக்கு சொந்தமான இடங்களிலும், வேப்பேரியில் பைனான்சியர் மோகன்குமார் என்பவருடைய வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஆண்டு மோகன் குமார் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை  நடத்திய நிலையில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. தனியார்  நிறுவனங்களில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையினரின் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Night
Day