சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக ஷமீம் அஹமது பதவியேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக அலஹாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஷமீம் அஹமது பதவியேற்றுக் கொண்டார்.

அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த ஷமீம் அஹமது-வை, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந்தார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை தற்போது 67 ஆக உயர்ந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில், எட்டு நீதிபதிகள் பதவிகள் காலியாக உள்ளன. நீதிபதி ஷமீம் அஹமது, அலஹாபாத்தில் 1966ம் ஆண்டு பிறந்தார். சட்டப்படிப்பை முடித்து 1993 ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை துவங்கிய அவர், 2019ம் ஆண்டு அலஹாபாத் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2021ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day