சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடம் மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் இன்று முதல் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றில் தெற்கு ரயில்வேயின் பன்முக ஒருங்கிணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம், தெற்கு இரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்கு அருகில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் அனைத்து பயணிகளும் இடமாற்றம் செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்துமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது. 

Night
Day