சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருந்து மாத்திரை வழங்கும் இடத்தில் செவிலியர்கள் இல்லாததால் நீண்ட நேரமாக பொதுமக்கள் காத்திருந்து அவதிக்குள்ளாகினர். குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று OP சீட்டு வாங்கும் இடத்தில் ஒரு நபர் மட்டுமே இருந்ததால் 500க்கும் பொதுமக்கள் நீண்ட நேரமாக வரிசையில் நின்று அவதிக்குள்ளாகினர். 

அதேபோல் மாத்திரை, மருந்து வாங்கும் இடத்திலும் செவிலியர்கள் இல்லாததால் பொதுமக்கள் பல மணி நேரங்களாக காத்ததிருந்தனர், இது குறித்து மருத்துவர்களிடம் கேட்ட நிலையில் உரிய பதிலளிக்காமல் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

varient
Night
Day