சென்னை கோயம்பேடு சந்தையில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் மக்கள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கோயம்பேடு சந்தையில் குவியும் குப்பைகளை மார்கெட் நிர்வாகம் அகற்றாததால் பொதுமக்களும் வியாபாரிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து காய், கனிகளை ஏற்றிக்கொண்டு ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் நாள்தோறும் கொட்டப்படும் காய்கறிகளின் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றாமல் மார்கெட் நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் வியாபாரிகளும் பொதுமக்களும் சந்தைக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மழைக்காலங்களில் குப்பைகள் மீது தண்ணீர் தேங்கி சேரும் சகதிமாக இருப்பதாகவும் வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 

Night
Day