சென்னை தியாகராயநகரில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல் - இளைஞரை கட்டி வைத்து வெளுத்த மக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் தெருவில் நடந்து சென்ற இளம்பெண்ணின் கன்னத்தை கிள்ளி ஐ லவ் யூ செல்லம் என கூறிவிட்டு தப்பியோட முயன்ற நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் தியாகராய நகரில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் வேலைக்குச் செல்வதற்காக, தான் தங்கியிருந்த விடுதியிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் திடீரென, இளம்பெண்ணின் கன்னத்தை கிள்ளி, "ஐ லவ்யூ செல்லம்" என கூறிவிட்டு, தப்பியோட முயன்றார். 

அப்போது அந்த பெண் சத்தம் போட்டதால், அங்கிருந்த பொதுமக்கள் உடனே அந்த இளைஞரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனாம்பேட்டை போலீசார், இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் தியாகராய நகரைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது. சென்னையில் பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Night
Day