சென்னை திருவல்லிக்கேணி தனியார் உணவக உணவால் 54 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் உணவகத்தில் பிரியாணி மற்றும் சவர்மா சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது. 

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ் தனது நண்பர்கள் 6 பேருடன் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் உணவகத்தில் சவர்மா சாப்பிட்டுள்ளார். மறுநாள் காலை உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து  திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் சோதனை நடத்தி, சீல் வைத்தனர். இதனிடையே அந்த உணவகத்தில் பிரியாணி மற்றும் சவர்மா சாப்பிட்ட 20 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில், உணவு சாப்பிட்ட மேலும் 34 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Night
Day