சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவால் 35-க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பாதிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு காரணமாக தனியார் பள்ளியில் பயிலும் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்படைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவொற்றியூர் கிராமதெரு பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் திடீரென கெமிக்கல் வாசம் வீசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து பள்ளிக்கு சென்ற பெற்றோர், மாணவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதில் 35 மாணவர்கள் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார் அருகாமையில் இருக்கக்கூடிய தொழிற்சாலையில் இருந்து வாயு வெளியேறியதா? அல்லது பள்ளியின் ஆய்வுக்கூடத்தில் இருந்து வெளியேறியதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day