சென்னை திருவொற்றியூர் விக்டோரியா பள்ளி தற்காலிக மூடல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவொற்றியூரில் வாயுக்கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளியில் மாணவிகள் மீண்டும் மயங்கி விழுந்ததை அடுத்து, பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 25ம் தேதி ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக 40 மாணவ, மாணவிகள் மயக்கமடைந்தனர். இதனையடுத்து, 10 நாட்களாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் இன்று பள்ளி திறக்கப்பட்டதால் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது 10 நாட்களாகியும் வாயுக்கசிவிற்கான காரணத்தை தெளிவாக கூறாததால், பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதே பள்ளியில் இன்று மீண்டும் 8 மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி குழந்தைகளின் உயிரோடு தமிழக அரசு விளையாடுவதாக குற்றம்சாட்டிய பெற்றோர்கள், பள்ளி மூடப்பட்டு 10 நாட்கள் ஆன பிறகும் முறையான ஆய்வு நடத்தாதது ஏன்? என கேள்வி எழுப்பினர். தமிழக அரசு வெறும் கண்துடைப்புக்காக ஆய்வு செய்துள்ளதாக குற்றம் சாட்டிய பெற்றோர்கள், தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், 10 நாட்களுக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்ட நிலையில் 8 மாணவிகள் மயங்கி விழுந்ததால், பள்ளி மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்டது.

Night
Day