சென்னை திருவொற்றியூர் - கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த பெண் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவொற்றியூர் அருகே ஒரே பகுதியை சேர்ந்த பலருக்கு ஏற்பட்ட உடல் உபாதைகளால் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் அருகே குப்பம் பகுதியில் விநியோகிக்கப்பட்ட கழிவுநீர் கலந்த குடிநீரால் அப்பகுதி மக்களுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு அவதிப்பட்ட நிலையில், அவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தங்கள் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதாக ஏற்கனவே புகார் அளித்திருந்த நிலையில், இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் உயிர்பலி ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

Night
Day