சென்னை துறைமுகம் - மாயமான ஓட்டுநரை மீட்கக்கோரி அவரது தாயார் கதறல்...

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை துறைமுகத்தில் கார் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் மாயமான நிலையில், அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

இந்திய கடலோர காவல்படை வீரர் ஜோகேந்திர காண்டா, சென்னை துறைமுகத்தில் உள்ள ஜவகர் டாக் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஓட்டுநர் காரை பின்னோக்கி எடுத்தபோது, எதிர்பாரா விதமாக பிரேக் பிடிக்காததால், கார் நிலை தடுமாறி கடலில் விழுந்தது. இதில் கடலில் விழுந்த ஜோகேந்திர காண்டா, படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடலில் மூழ்கிய காரும் மீட்கப்பட்ட நிலையில், மாயமான ஓட்டுநர் முகமது ஷாகியை தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்பு பணித்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே முகமது ஷாகியை மீட்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

varient
Night
Day