சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக கனமழை பெய்து வருகிறது. 

வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு விட்டுவிட்டு மழை பெய்த நிலையில், இன்று காலையும் பரவலாக மழை பெய்தது. கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்லும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்

Night
Day