சென்னை மாநகராட்சி ரூ.1,488.5 கோடி கடன் நிலுவை வைத்துள்ளது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மாநகராட்சிக்கு ஆயிரத்து 488 கோடி ரூபாய் கடன் இருப்பதாக மேயர் ப்ரியா தெரிவித்துள்ளார். 

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டத்தொடர் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் கேள்வி நேரத்தின் போது பேசிய பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த, சென்னை மாநகராட்சிக்கு எவ்வளவு கடன் உள்ளது? எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய மேயர் ப்ரியா, 1.1.2025 வரை சென்னை மாநகராட்சிக்கு 3 ஆயிரத்து 65 கோடியே 65 லட்ச ரூபாய் கடன் உள்ளதாகவும் அதில் ஆயிரத்து 577 கோடியே 10 லட்ச ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆயிரத்து 488 கோடியே 50 லட்ச ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும்  இந்த கடனுக்காக எட்டரைக் கோடி ரூபாய் வட்டி செலுத்தி வருவதோடு, ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை அசல் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Night
Day