சென்னை மாநகர பேருந்துகளை தனியார் இயக்க டெண்டர்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மாநகர பேருந்துகளை தனியார் ஒட்டுநர்கள், நடத்துநர்கள் இயக்குவதற்காக அரசு போக்குவரத்து கழகம் டெண்டர் கோரியது தொழிற்சங்கத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களைத் தனியார் வசம் கொடுக்கக் கூடாது என தொடர்ந்து தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கங்கள் வலியுறுத்து வருகின்றனர். ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி ஒப்பந்ததாரர்கள் இடமிருந்து அரசு போக்குவரத்து கழகம் டெண்டர் கோரியுள்ளது. ஆகஸ்ட் 28-ஆம் தேதி டெண்டர் திறக்கப்படும் என்றும் அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கடும் பீதியையும், அதிர்ச்சியையும் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து கழகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு டெண்டர் கோரபட்டபோது தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடுமையான நஷ்டத்தில் இயங்கி வரும் தமிழக அரசு போக்குவரத்து கழகம், 30 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளிலேயே பணப் பலன்கள் எதையும் கொடுக்க முடியாத நிலையில் தவித்து வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்தே அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் செயல்பட்டு வருவதாக சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் குற்றம்சாட்டியுள்ளார். 

varient
Night
Day