சென்னை மெட்ரோ ரயில் பாதையை பராமரிக்கும் இயந்திரம் தயாரிக்க ஒப்பந்தம் - அமெரிக்கா நிறுவனத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மெட்ரோ ரயில் பாதையை பராமரிக்கும் இயந்திரத்தை தயாரிக்க, அமெரிக்கா நிறுவனத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், குறைந்தபட்சம் 8 ஸ்டோன் கொண்ட ரயில் பாதையை பராமரிக்கும் தானியங்கி அரைக்கும் இயந்திரத்தின் வடிவமைப்பு, பராமரிப்பு மற்றும் இயக்கத்திற்கான ஒப்பந்தத்தை அமெரிக்கா நிறுவனமான ஹர்ஸ்கோ ரயில் எல்எல்சி நிறுவனத்திற்கு 53 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கியுள்ளது. இயந்திரம், பணி தொடங்கிய நாளிலிருந்து 4 ஆண்டுகளுக்கு விரிவான பராமரிப்பு மற்றும் செயல்பாடு ஆகியவற்றிற்காக இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 

Night
Day