சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான வட இந்தியர்கள் திரண்டு சத் பூஜை வழிபாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சூரிய பகவானை போற்றி வணங்கும் சத்பூஜை விழா வடமாநிலத்தவர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான வட இந்தியர்கள் சத் பூஜை வழிபாடு மேற்கொண்டனர்.    

சூரியனுக்கு நன்றி விதமான பண்டிகையாக கொண்டாடப்படும் சத்பூஜை வடமாநில மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடுவர். அதேபோல், வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து வந்த மக்களும், தாங்கள் வசிக்கும் பகுதியில் சத் பூஜையை கொண்டாடி மகிழ்வர். இந்நாளில் ஆறு, குளம், கடல் நீரை கங்கை ஆறாக கருதி உண்ணா நோன்பிருந்து, சூரியம் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தில் படையல் வைத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில், 4 நாட்கள் நடைபெறும் சத் பூஜை விழாவின் இறுதிநாளான இன்று, சென்னையில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள், மெரினாவில் குவிந்தனர். கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டி, பழவகைகளை வைத்து குழிக்குள் விளக்கு ஏற்றி சாமி புகைப்படம் வைத்து சூரியனை வழிபட்டனர். சிறுவர்களும் பட்டாசு வெடித்து சத்பூஜையை கொண்டாடினர். 

varient
Night
Day