சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேங்கியுள்ள கழிவுநீர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கழிவு நீர் தேங்கியுள்ளதால் சிகிச்சைக்கு செல்லும்  நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மனநல மருத்துவத்துறை புறநோயாளிகள் பிரிவு எதிரே கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனை கடந்தே பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் செல்ல வேண்டியுள்ளதால், சிகிச்சை வரும் தங்களுக்கே மேலும் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனை அகற்ற மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், உடனடியாக சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day