சென்னை - ஐஐடி ஆராய்ச்சி ஆய்வகங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அழைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ஐஐடி, தனது அதி நவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிட வருமாறு, பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. சென்னை ஐஐடியின் ‘அனைவருக்கும் ஐஐடிஎம்’ என்ற தொலை நோக்குப் பார்வையின் சிறப்பு முன்னெடுப்பாக இந்நிறுவனத்தின் 'திறந்தவெளி அரங்கு-2025' நிகழ்வு வரும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.  இதில் அதிநவீன ஆராய்ச்சி, முன்னோடித் தொழில் நுட்பங்கள், புத்தாக்க ஆராய்ச்சி, ஆய்வுத்திட்டங்கள், செயல் விளக்கங்கள் அடங்கிய 60-க்கும் மேற்பட்ட அரங்குகளை பொதுமக்கள் பார்வையிடலாம் என்றும் 4 நான்கு தேசிய ஆராய்ச்சி மையங்கள் உட்பட 90-க்கும் மேற்பட்ட ஆய்வங்களையும் நேரில் காணமுடியும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள பொதுமக்கள் வரும் 25-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Night
Day