சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ராஜ் காட்டன் புதிய கிளை தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ராஜ் காட்டன் புதிய கிளை தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சத்யா ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி நிறுவனர் முரளி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை தச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா அண்ணாதுரை தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய ராம்ராஜ் காட்டன் நிர்வாக மேலாளர், 1983ம் ஆண்டு தங்களது முதல் ஷோரூம் தொடங்கப்பட்டது என்றும் தற்போது 300க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளதாகவும், தமிழர்களின் பாரம்பரியத்தையும் நெசவாளர்களின் வாழ்வாரத்தை கருதி கொண்டு கிளைகளை திறந்து வருவதாக அவர் தெரிவித்தார். பல மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் காட்டன் ஆடைகளை அணியவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Night
Day