சென்னை - ரூமி ஒன் ஹைபிரிட் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கடற்கரையிலிருந்து ஸ்பேஸ் ஸோன் இந்தியா தயாரித்த ரூமி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த ஸ்டாட் அப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் இந்தியா, மார்ட்டின் குரூப் குழுமத்துடன் இணைத்து மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், RHUMI 1 என்ற ராக்கெட்டை உருவாக்கியது. இதுவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ரீயுசபிள் ஹைப்ரிட் ராக்கெட் ஆகும். 3 சோதனை செயற்கைக்கோள்களுடன் தயாரிக்கப்பட்ட இந்த ரூமி ராக்கெட் இன்று காலை திருவிடந்தை கடற்கரையிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 

Night
Day