சென்னை - ஹாங்காங் இடையே மீண்டும் நேரடி விமான சேவை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொரோனா காலக்கட்டத்தில் நிறுத்தப்பட்ட சென்னை - ஹாங்காங் இடையிலான நேரடி விமான சேவை 4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கியது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்தது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டதையடுத்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. அதன்பிறகு சிறுக சிறுக போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்நிலையில் சென்னை - ஹாங்காங் இடையிலான இயக்கப்படும் கேக்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம், 4 ஆண்டுகளுக்கு பின் இன்று முதல் மீண்டும் சேவையை தொடங்கியுள்ளது. தற்போது வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் போக்குவரத்தை பொறுத்து தினசரி இயக்கப்பட உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

Night
Day