சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,000-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. அட்சய திருதியை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ஆயிரத்து 240 ரூபாய் அதிகரித்த நிலையில், இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 54 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 750 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் குறைந்து 90 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து 90 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day