சென்னை : ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54880-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தங்கம் விலையில் தினசரி மாற்றம் ஏற்படுகிறது. சென்னையில் நேற்று தங்கம் விலை 55 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்ட நிலையில், இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 860 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 99 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் குறைந்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day