சென்னை : ஆபரணத் தங்கம் சவரன் ரூ.360 உயர்ந்து, ரூ.49,080-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து விற்பனையானது. இந்நிலையில், இன்று சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 49 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 135 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 80 ரூபாய் 30 காசுகளுக்கும், கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து 80 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

varient
Night
Day