சென்னை : ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53800-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கம் விலை நேற்று 632 ரூபாய் அதிகரித்த நிலையில், இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 725 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் 30 காசுகள் குறைந்து 96 ரூபாய் 20 காசுகளுக்கும், கிலோவுக்கு 2 ஆயிரத்து 300 ரூபாய் குறைந்து 96 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day