சென்னை : காவலர் குடியிருப்பில் சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் 5 வயது சிறுமியை நாய்கள் கடித்து குதறிய சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள்,
ஆலந்தூர் அருகே காவலரின் வளர்ப்பு நாய் சிறுவனை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

வேளச்சேரியை சேர்ந்த அஸ்வந்த் என்ற சிறுவன் கோடை விடுமுறையையொட்டி ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் உள்ள தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது குடியிருப்பு வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை, காவலர் ஒருவரின் வளர்ப்பு நாய் கடித்துள்ளது. இதனை கண்ட சக குடியிருப்பு வாசிகள் காயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது அஸ்வந்தை கடித்தது சைவீரன் அஸ்கி வகையை சேர்ந்த நாய் என்றும், குடியிருப்பில் காவலர்களுக்கு வீடு ஒதுக்கும்போது செல்லப்பிராணிகளுக்கான விதிகள் இருக்கும் தருவாயில் சிலர் இதனை மீறுவதால் இதுபோன்று அசம்பாவிதங்கள் நடப்பதாக சக குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சிறுவனின் உறவினர்கள் புனித தோமையர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னையில் நேற்று முன்தினம் ஆயிரம் விளக்கு பகுதியில் 5 வயது சிறுமியை ராட்விலர் நாய்கள் கடித்து குதறின. இந்த சம்பவத்தின் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் மீள்வதற்குள், ஆலந்தூர் அருகே சிறுவனை வளர்ப்பு நாய் கடித்துள்ள சம்பவம் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஏற்கெனவே தெருநாய்கள் தொல்லையால் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள், தற்போது வளர்ப்பு நாய்களின் அச்சுறுத்தால் அச்சம் அடைந்துள்ளனர்.


varient
Night
Day