சென்னை : தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.54,360-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ஒரே நாளில் 560 ரூபாய் அதிகரித்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. நேற்று ஆபரண தங்கம் சவரனுக்கு 280 உயர்ந்த நிலையில், இன்று ஒரே நாளில் 560 ரூபாய் உயர்ந்து, 54 ஆயிரத்து 360 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 795 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலை ஒரு ரூபாய் 50 காசுகள் அதிகரித்து 92 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு ஆயிரத்து 500 ரூபாய் அதிகரித்து 92 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day