சென்னை: குடிநீர் குழாய் உடைப்பு, பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பெருங்குடி அருகே குடிநீர் சேமிப்பு தொட்டி குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். டெலிபோன் நகரில் கடந்த சில மாதங்களாக மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிநடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தால் வடிகால்வாய் பணியின்போது, அங்கிருந்த குடிநீர் சேமிப்பு தொட்டியின் குழாய் உடைந்து பல லிட்டர் தண்ணீர் வெளியேறியது. இதனால், அப்பகுதி முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். 

varient
Night
Day