தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
சென்னை ஆதம்பாக்கத்தில் ரயில் பாலம் சரிந்து விழுந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் அதனை அப்புறப்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை ஆதம்பாக்கத்தை அடுத்த தில்லை கங்காநகர் பகுதியில் ரயில் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது 80 அடி நீளத்திற்கு பாலத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில், பாலம் சரிந்து விழுந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் தற்போது வரை அதனை அகற்றாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு ஆளாவதாக புகார் எழுந்துள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...