சென்னை: சாலையில் வாகனங்களை நிறுத்திச்சென்ற திமுகவினரால் போக்குவரத்து நெரிசல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்பர திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளுக்காக வருகை தந்த திமுகவினரின் வாகனங்களால் சென்னை அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் ஏராளமான திமுகவினர் குவிந்தனர். அவர்களது வாகனங்களை, அண்ணாசாலை ஓரமும், அறிவாலயத்தின் எதிரேயும் நிறுத்தியுள்ளதால் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அவ்வழியாக அலுவலகங்களுக்கு செல்வோர், பொதுமக்கள் என பலரும் அவதிக்கு ஆளாகினர். 

Night
Day