சென்னை: தி.நகர் நிர்வாகிகள் குழு கூட்டத்தில் திமுக நிர்வாகிகளுக்குள் கைகலப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 2 தரப்புகளாக பிரிந்து ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மக்களவை தேர்தலை முன்னிட்டு, சென்னை தியாகராய நகர் எம்.எல்.ஏ. ஜெ. கருணாநிதி தலைமையில், திமுக நிர்வாகிகள் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. அப்போது தி.நகர் திமுக வட்ட செயலாளர் செந்தில்குமார் மீது திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் ஜெகன்ராஜ் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதனால், ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ. கருணாநிதி மற்றும் செந்தில்குமார் தரப்பு, ஜெகன்ராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த திமுக நிர்வாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

Night
Day