தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
சென்னை பூந்தமல்லியில் நிற்காமல் சென்ற மாநகர அரசு பேருந்தை வழிமறித்து தட்டிக்கேட்ட நபரை ஓட்டுநரும் நடத்துநரும் ஆபாசமாக திட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. பூந்தமல்லி அடுத்த கல்லறை பேருந்து நிறுத்தத்தில் பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர் பேருந்துக்காக நீண்ட நேரமாக காத்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவ்வழியே சென்ற மாநகர அரசுப்பேருந்து, பார்வை மாற்றுத்திறனாளி சைகை காட்டியும் நிற்காமல் சென்றது. இதனை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர், பார்வை மாற்றுத்திறனாளியை பைக்கில் அழைத்து சென்று, பேருந்தை மடக்கி பிடித்து ஓட்டுநரை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் கேள்வி கேட்டநபரை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், ஓட்டுநர், நடத்துநர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...