சென்னை: மந்த கதியில் நடைபெறும் மருத்துவமனை கட்டுமான பணிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சியில் மந்த கதியில் நடைபெற்று வரும் அரசு மருத்துவமனையின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆவடி புதிய ராணுவ சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் 2 கோடியே 75 லட்சம் மதிப்பில் மருத்துவமனையை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. 2021ம் ஆண்டு மே மாதம் பூமிபூஜை போடப்பட்ட நிலையில், 15 மாதங்களுக்குள் முடிக்க வேண்டிய கட்டுமான பணிகள் தற்போது வரை நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்காததால் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

Night
Day