சென்னை: மாணவரை தாக்கிய தலைமை காவலர் பணியிடை நீக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வியாசர்பாடியில் கல்லூரி மாணவனை தாக்கியதோடு, கை விலங்கு பூட்டி அழைத்துச் சென்ற தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வியாசர்பாடியை சேர்ந்த அருண்குமார் என்பவர், டாக்டர் அம்பேத்கர் கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்துக் கொண்டு, பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் சென்னை கடற்கரை நிறுத்தத்தில் இருந்து பெரம்பூர் நோக்கி தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பேப்பர் மில்ஸ் சாலை அருகே ஆட்டோ வந்தபோது, முன்னால் சென்ற மற்றொரு ஆட்டோ திடீரென பிரேக் பிடித்து நிறுத்தியதால், அருண்குமார் ஆட்டோவின் மீது மோதியது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, அவ்வழியாக வந்த செம்பியம் தலைமை காவலர் அண்ணாமலை என்பவர், என்ன நடந்தது என்று கேட்காமலேயே, அருண்குமாரை தாக்கி கை விலங்கு பூட்டி காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார். இதனை கண்டித்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், தலைமை காவலர் அண்ணாமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

varient
Night
Day