செம்மண் ஊழல் - மகனுடன், அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தில் ஆஜர்

எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணக்காக அமைச்சர் பொன்முடி தனது மகனுடன் நேரில் ஆஜரானார்.

விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் திமுக முன்னாள் எம்பி கவுதம சிகாமணி உள்பட 6 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி பொன்முடி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை  விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அமலாக்கத்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டது.

Night
Day