சேதமான கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய நூலக கட்டிடம் கட்டக்கோரி வழக்கு - ஆட்சியர் நிலையறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரில் புதிய நூலக கட்டிடம் கட்ட உத்தரவிடக் கோரிய வழக்கில், ஆட்சியர் நிலையறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஆனந்தூரில் செயல்பட்டு வரும் நூலகக் கட்டிடமானது மிகவும் சேதமடைந்துள்ளதால், அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டக்கோரிய வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் - மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய நூலக கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக அரசு தரப்பு தெரிவித்தது. இதையடுத்து நீதிபதிகள், இவ்வழக்கு குறித்து ராமநாதபுரம் ஆட்சியர் நிலையறிக்கை தாக்கல் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Night
Day